ரோகித்துக்கு கேப்டன் பதவி அவசியமா? -அடுத்தடுத்து கிளம்பும் சர்ச்சைகள்
இந்திய டி20 அணியின் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டதற்கு அடுக்கடுக்கான கேள்விகளை எழுந்துள்ளது.
உலகக்கோப்பை டி20 தொடருக்கு பிறகு இந்திய டி20 அணிக்கு தான் கேப்டனாக தொடரப் போவதில்லை என்று விராட் கோலி அறிவித்துள்ளார்.
இதனால் ரோகித் சர்மா தான் டி20 அணியின் அடுத்த கேப்டன் என்பது உறுதியாகியுள்ளது. ஒருவேளை ரோகித்சர்மா கேப்டன் ஆகிறார் என்றால் இந்திய அணியின் எதிர்கால திட்டம் என்ன என்பது கேள்வியாக உள்ளது.
ஏனெனில் 34 வயதில் ரோகித் கேப்டன் ஆகிறார் என்றால், இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு அவர் கேப்டனாக பணியாற்றப் போகிறார்? . சொல்லப்போனால் இன்னும் 2 வருடம் அவர் கிரிக்கெட்டில் தாக்குப்பிடிப்பதே பெரிய விஷயம் என கூறப்படுகிறது.
இதனால் அவருக்கு பதிலாக இளம் இரத்தத்திடம் அணியை ஒப்படைக்கலாம். அடுத்த டி20 உலகக் கோப்பை தொடருக்குள் அந்த அணி கட்டமைக்கப்பட்டுவிடும். இப்படி ஒன்றிரண்டு வருடங்கள் மட்டும் ஒருவர் கேப்டனாக பணிபுரிவதால் அணிக்கு என்ன லாபம்? தொலைநோக்கு பார்வையில் இது அணிக்கு பயன் தருமா? என்பது போன்ற பல கேள்விகள் எழுந்துள்ளதற்கு பிசிசிஐ தான் பதில் சொல்ல வேண்டும்.