யம்மாடி 3 போட்டிகளில் சாதனைகள் மேல் சாதனை - விராட் கோலியை பின்னுக்கு தள்ளிய ரோகித் சர்மா
நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றிய நிலையில் இந்திய அணியின் புது கேப்டன் ரோகித் சர்மா பல சாதனைகளை படைத்துள்ளார்.
கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற 3வது டி20 போட்டியில் இந்திய அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.இப்போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா சிறப்பாக ஆடி அரைசதம் விளாசினார்.இதன்மூலம் டி20 போட்டிகளில் அதிக அரை சதம் அடித்தவர் என்ற விராட் கோலியின் சாதனையை ரோகித் சர்மா முறியடித்துள்ளார். இது ரோகித் சர்மாவின் 30வது அரை சதமாகும்.
மேலும் சர்வதேச டி20 போட்டிகளில் 150 சிக்சர்கள் விளாசிய இரண்டாவது வீரர் என்ற மைல்கல்லையும் ரோகித் சர்மா எட்டியுள்ளார். அதேசமயம் முழுநேர கேப்டனாக பொறுப்பேற்ற பின் ஆடிய முதல் தொடரையே முழுவதுமாக கைப்பற்றியும் ரோகித் சர்மா சாதனைப் படைத்துள்ளார். இதனை அவரின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.