அடுத்த டி20 கேப்டன்னா சும்மாவா? - சாதனைப் படைத்த ரோகித் சர்மா
நமீபியா அணிக்கு எதிரான போட்டியின் மூலம் இந்திய அணியின் ரோகித் சர்மா புதிய மைல்கல் ஒன்றை எட்டியுள்ளார்.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் இந்திய அணியும், நமீபியா அணியும் மோதின. இதில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
முதலில் பேட்டிங் செய்த நமீபியா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் களம் கண்ட இந்திய அணியில் தொடக்க வீரர்கள் கே.எல்.ராகுல், ரோகித் சர்மா இருவரும் அரைசதம் அடிக்க எளிதாக வெற்றி பெற்றது.
இந்தநிலையில், இந்த போட்டியின் மூலம் இந்திய அணியின் தொடக்க வீரரான ரோகித் சர்மா டி20 போட்டிகளில் புதிய மைல்கல் ஒன்றை எட்டியுள்ளார். அதாவது இன்றைய போட்டியின் மூலம் டி20 அரங்கில் தனது 3000வது ரன்னை பூர்த்தி செய்த ரோகித் சர்மா, இதன் மூலம் டி.20 போட்டிகளில் 3000+ ரன்கள் கடந்த மூன்றாவது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இந்த பட்டியலில் விராட் கோலி 3227 ரன்களுடன் முதலிடத்திலும், நியூசிலாந்தின் மார்டின் கப்தில் 3115 ரன்களுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.