Viral Photo : மெஸ்ஸி T.Shirtல் மாஸ் காட்டிய ரோஹித் சர்மா - மகிழ்ச்சியில் ரசிகர்கள்...!

Rohit Sharma Lionel Messi Viral Video Argentina
By Nandhini Mar 03, 2023 02:59 PM GMT
Report

அர்ஜென்டினா நட்சத்திர கால்பந்து விரர் லயோனல் மெஸ்ஸியின் T.Shirtடை அணிந்து இந்திய கிரிக்கெட் கேப்டன் ரோஹித் சர்மா மாஸ் காட்டிய புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இந்நிலையில், இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் - கவாஸ்கர் தொடரின் 3-வது டெஸ்ட் இந்தூரில் நேற்று முன்தினம் தொடங்கி நடந்து வந்தது.

இப்போட்டியின் இறுதியில் இன்று, ஆஸ்திரேலிய அணி 18.5 ஓவர்களில் 1 விக்கெட் மட்டும் இழந்து, 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம், ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் தொடரில் நீடித்துள்ளது.

rohit-sharma-argentina-messi-t-shirt

மெஸ்ஸி T.Shirtல் மாஸ் காட்டிய ரோஹித் சர்மா

இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது.

அதில், அர்ஜென்டினா நட்சத்திர கால்பந்து விரர் லயோனல் மெஸ்ஸியின் T.Shirtடை அணிந்து இந்திய கிரிக்கெட் கேப்டன் ரோஹித் சர்மா மாஸ் காட்டிய புகைப்படம் தற்போது இணையதளங்களில் வெளியாகி வைரைலாகி வருகிறது. 

இதைப் பார்த்த ரசிகர்கள், லயனோல் மெஸ்ஸியிடமிருந்து அர்ஜென்டினா கேப்டன் பொறுப்பை ரோஹித் சர்மா ஏற்றுக்கொண்டார். அவர் 2026 wc வரை அர்ஜென்டினாவை வழிநடத்துவார் என்று கிண்டலடித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.