உனக்கு இதே வேலையா போச்சு...கே.எல்.ராகுலால் கடுப்பான ரோஹித் சர்மா
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வலுவான நிலையை நோக்கி நகர்ந்து வருகிறது.
அதிரடி காட்டிய இந்திய அணி
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்திய அணியுடனான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் போட்டி நாக்பூர் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த ஆஸ்திரேலிய அணிக்கு அந்த அணியின் துவக்க வீரர்களான டேவிட் வார்னர் மற்றும் காவஜா ஆகியோர் தலா 1 ரன்னில் விக்கெட்டை இழந்து மிகப்பெரும் ஏமாற்றம் கொடுத்தனர்.
இதையடுத்து களம் இறங்கி வீரர்களில் லபுசேன் (49) ஸ்டீவ் ஸ்மித் (37) ஹேண்டஸ்கோம்ப் (31) மற்றும் அலெக்ஸ் கேரி (36) ஆகியோரை தவிர மற்ற வீரர்களில் ஒருவர் கூட ஒற்றை இலக்க ரன்னை கூட தாண்டாமல் வந்த வேகத்தில் விக்கெட்டை பறிகொடுத்து அடுத்தடுத்து வெளியேறியதால், ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சில் 177 ரன்களில் ஆல் அவுட்டமானது.
கோபமடைந்த ரோஹித் சர்மா
முதல் இன்னிங்ஸில் இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகளையும், ரவிச்சந்திர அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
பின்னர் களம் இறங்கிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவும், துணை கேப்டன் கே.எல்.ராகுலும் நல்ல துவக்கத்தை அமைத்து கொடுத்தனர்.
71 பந்துகளை எதிர்கொண்ட கே.எல்.ராகுல் அதில் 20 ரன்கள் எடுத்திருந்த போது தேவை இல்லாத ஷாட் அடித்து விக்கெட்டை இழந்தார்.
இந்த நிலையில் கே.எல்.ராகுல் தேவை இல்லாத விக்கெட்டை இழந்ததால் ரோஹித் சர்மா கோபமடைந் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
— Anna 24GhanteChaukanna (@Anna24GhanteCh2) February 9, 2023