ப்பா..சான்ஸே இல்ல! கோலியின் அந்த ஆட்டத்தை என்னால் மறக்கவே முடியாது - ரோகித் ஷர்மா புகழாரம்
இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையியேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்கும் நிலையில் இதற்கான டிக்கெட் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த போட்டி விராட் கோலியின் 100-வது சர்வதேச டெஸ்ட் போட்டியாகும்.
[TTR8GO
இந்நிலையில், கேப்டன் ரோகித் சர்மா விராட் கோலியின் பயணம் குறித்து பேசுகையில்,
“விராட் கோலியின் இந்த டெஸ்ட் பயணம் மகத்தானது. அவர் இந்திய அணிக்காக பல நல்ல செயல் திட்டங்களை மேற்கொண்டு அணிக்காக பல மாற்றத்தை கொண்டு வந்துள்ளார்.
அதன் மூலம் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி நல்ல முன்னேற்றத்தை கண்டுள்ளது.
5, 6 ஆண்டுகளாக டெஸ்ட் போட்டியில் நாங்கள் சிறப்பாக விளையாடி இருக்கிறோம், அதற்கு காரணம் விராட் கோலி தான். இந்தியா சாதித்ததற்கான புகழ் அனைத்தும் கோலிக்கே உரியது.
விராட் கோலியின் 100-வது டெஸ்ட் போட்டிக்கு பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவது நல்ல விசயம். இது கோலிக்கும், அணிக்குமே நல்ல உத்வேகத்தை அளிக்கும். நாங்கள் வெற்றியை நோக்கி விளையாடுவோம்.
விராட் கோலியின் சிறந்த இன்னிங்ஸ் எது என்று கேட்டால், 2013 தென்னாப்பிரிக்க மண்ணில் அவர் அடித்த சதத்தை தான் சொல்வேன்.
முதல் முறையாக சீனியர்கள் இல்லாமல், கடினமான ஆடுகளத்தில் விளையாடினோம். ஆனால் அன்று அவர் அடித்த சதம் எனக்கு இன்னும் மனதில் நீங்காமல் இருக்கிறது.
என்னை பொறத்தவரை கோலியின் சிறந்த டெஸ்ட் இன்னிங்ஸ் அது தான் என்பேன். விராட் கோலி டெஸ்ட் கேப்டனாக சாதித்ததில் என் மனதில் நீங்காதவை என்றால், அது ஆஸ்திரேலிய மண்ணில் பெற்ற டெஸ்ட் தான்.
எந்த அணியும் செய்யாததை நாங்கள் அன்று அங்கு செய்தோம். விராட் கோலியின் கேப்டன்ஸி மற்றும் பேட்டிங் பிரம்மிக்கும் வகையில் அமைந்தது.
100-வது டெஸ்ட்டும் அவருக்கு சிறந்த வகையில் அமையும் என முழுமையாக நம்புகிறேன்” என கூறியுள்ளார்.