ரோகித்துக்குதான் வயசாகிடுச்சே - இவர கேப்டனாக்குங்க: இந்திய அணிக்கு முன்னாள் வீரர் அட்வைஸ்

Anupriyamkumaresan
in கிரிக்கெட்Report this article
விராட் கோலிக்கு பின் டி20 தொடர் கேப்டனாக இந்த வீரரை கேப்டனாக்கினால் இந்திய அணி பலம் வாய்ந்த அணியாக திகழும் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் மான்டி பெனசர் பத்திரிகையாளர்களின் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.
2021 உலக கோப்பை தொடருக்கான பயிற்சி ஆட்டம் துபாய் மைதானத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த உலகக் கோப்பை தொடரில் விராட்கோலி தலைமையிலான இந்திய அணி கோப்பையை வெல்வதற்கு அதிக வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக விராட் கோலி இந்த உலக கோப்பை தொடருக்குப் பின் டி20 தொடரின் கேப்டனாக பயணிக்க மாட்டார் என்பதால் நிச்சயம் இந்த உலக கோப்பை தொடரை எப்படியாவது வெல்ல வேண்டும் என்று இந்திய அணி கடும் முயற்சி செய்து வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் உலக கோப்பை தொடர் சம்பந்தமான கருத்துக்கள் அதிகமாக பேசப்பட்டு வந்தாலும் விராட் கோலிக்கு பின் இந்திய அணியின் டி20 தொடர் கேப்டனாக யார் இருந்தால் சிறப்பாக இருக்கும் என்ற பேச்சும் கிரிக்கெட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் மான்டி பெனசர் பத்திரிக்கையாளர்களின் சந்திப்பின் பொழுது விராட் கோலிக்கு பின் இந்திய அணியின் டி20 கேப்டனாக யார் இருந்தால் இந்திய அணிக்கு பலமாக இருக்கும் என்று பேசினார்.
அதில் பேசிய அவர், நிச்சயம் இந்திய அணியின் டி20 கேப்டனாக ரிஷப் பண்ட் தான் இருக்க வேண்டும், ஏனென்றால் இவர் ஐபிஎல் தொடரில் மிக சிறந்த முறையில் கேப்டன் பொறுப்பை ஏற்று டெல்லி அணியை வழிநடத்தினார்.
மேலும் பக்குவமாகவும் அதே சமயத்தில் உச்சகட்ட நெருக்கடியையும் எளிதாக சமாளிக்க கூடிய திறமையும் ரிஷப் பண்டிடம் உள்ளது, இந்த பக்குவத்தை ரிஷப் பண்ட் எம்எஸ் தோனியிடமிருந்து மிக அழகிய முறையில் கற்று வைத்துள்ளார், ரிஷப் பண்டை ஒரு சிறந்த விக்கெட் கீப்பராக உருவாக்கிய பெருமை மகேந்திர சிங் தோனியை தான் போய் சேரும் என்று மாண்டி பேசினார்.
மேலும் ரோஹித் சர்மா குறித்து பேசிய அவர், ரோகித் சர்மா ஒரு மிகச்சிறந்த கேப்டன் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது ஆனால் அவருக்கு தற்பொழுது வயது 34, இந்திய அணி எதிர்கால சிந்தனையுடன் இருந்தால் நிச்சயம் அது ரிஷப் பண்டை இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கும் என்று மான்டி பெனசர் தெரிவித்தார்.