பேட்டிங்கா? பவுலிங்கா? மறந்துபோச்சே - முடிவை மறந்துபோன ரோகித் சர்மா

Rohit Sharma Indian Cricket Team New Zealand Cricket Team
By Thahir Jan 21, 2023 09:46 AM GMT
Report

இந்தியாவுடன் நியூசிலாந்து அணி 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

ஒரு நாள் போட்டி 

இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

rohit-forgot-the-result-after-winning-the-toss

இதையடுத்து இரண்டாவது போட்டி சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. போட்டி தொடங்குவதற்கு முன் டாஸ் போடப்பட்டது.

அப்போது ஆட்டத்தின் நடுவர் ஜவகல் ஸ்ரீநாத் முன்பாக நியூசிலாந்து கேப்டன் டாம் லாதம், வர்ணனையாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் நிற்க, இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டாஸை சுண்டினார்.

பேட்டிங்கா? பவுலிங்கா? முடிவை மறந்த ரோகித் சர்மா 

டாம் லாதம் ஹெட் என கேட்க, டாஸில் டெய்ல் விழுந்ததால் ரோஹித் சர்மா டாஸில் வெனறதாக அறிவிக்கப்பட்டது.

rohit-forgot-the-result-after-winning-the-toss

இதையடுத்து பேட்டிங்கா, பவுலிங்கா என நடுவர் ஜவகல் ஸ்ரீநாத் கேட்க, என்ன முடிவு செய்தோம் என்பதை மறந்து 10 வினாடிகள் கேப்டன் ரோகித் சர்மா தவித்தார்.

பின்னர் பவுலிங் என்று தேர்வு செய்தார். தற்போது இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.