ரகுவரன் இறப்பின் போது கூட அவர்கள் அப்படி செய்தார்கள்; நான் கெஞ்சினேன் - ரோகிணி வேதனை!
கணவர் ரகுவரன் இறப்பின் போது ஏற்பட்ட வேதனையான நிகழ்வு குறித்து நடிகை ரோகிணி பேசியுள்ளார்.
நடிகை ரோகிணி
குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமாகி பின்னர் நாயகியாக பல படங்களில் ரோகிணி நடித்துள்ளார். இவர் சினிமாவில் நடிப்பு மட்டுமல்லாமல் டப்பிங் கலைஞராகவும்,பாடலாசிரியராகவும் சிறப்பாக இருந்துள்ளார்.
தற்போது குணச்சித்திர நடிகையாகவும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க தலைவராகவும் செய்யப்பட்டு வருகிறார். இவர் கடந்த 1996ம் ஆண்டு தமிழ் சினிமாவில் ஹீரோக்களுக்கு சமமாக வில்லன் ரோல்களில் கலக்கி வந்த நடிகர் ரகுவரனை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண்குழந்தையும் உள்ளது.
ஆனால் சில கருத்து வேறுபாடுகள் காரணமாக திருமணமான 6 வருடத்தில் இருவரும் பிரிந்தனர். இதைத் தொடர்ந்து கடந்த 2008ம் ஆண்டு ரகுவரன் இறந்தார். அண்மையில் ரோகிணி ஒரு யூடியூப் சானெல் ஒன்றுக்கு பேட்டியளித்திருந்தார். அப்போது தனது கணவர் ரகுவரன் இறந்த சமயத்தில் நடந்த வேதனையான சம்பவம் ஒன்றை குறித்து ரோகிணி பேசியுள்ளார்.
பேட்டி
அவர் பேசுகையில் 'எனது கணவர் ரகுவரன் இறந்த பிறகு என் மகனை பள்ளியில் இருந்து அழைத்து வர சென்றேன். வரும் வழியில் நான் போன் பண்ணி சொன்னேன் 'தயவு செஞ்சு அங்கிருக்கும் பத்திரிக்கையாளர்களை வெளியில் கூட்டிக்கொண்டு போய் விடுங்கள்.
ஏனெனில் குழந்தையிடம் அப்பா இறந்து விட்டார் என்ற அதிர்ச்சியான செய்தியை சொல்லி நான் கூட்டிக்கொண்டு வருகிறேன் . வந்த பிறகு அங்கு நடப்பதெல்லாம் வெளியில் தெரிய வேண்டாம், எங்களுக்கு ஒரு தனிப்பட்ட இடமும்,நேரமும் வேண்டும் என்று சொன்னேன், அவர்களும் சரி என்று சொன்னார்கள். ஆனால் நான் வந்து வீட்டிற்குள் நுழையும்போது வெளியில் இருந்த பத்திரிக்கையாளர்களும் என்னுடனேயே உள்ளே வந்து விட்டார்கள்.
அப்போது நான் அவர்களிடம் கேட்டுக் கொண்டேன் ' இந்த ஒரு நேரம் மட்டும் நீங்கள் எங்களுக்காக விட்டுக் கொடுக்கலாம் தானே' என்று கேட்டேன். ஒரு மனிதநேயம் கூட இல்லாமல் அப்போதும் கூட அங்கு நடப்பதை படம் பிடித்து வெளியில் காண்பிக்க வேண்டும் என்று பத்திரிக்கையாளர்கள் நினைத்தார்கள். அந்த விஷயம் எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது. இந்த சம்பவத்தை தொடர்ந்து நிறைய நாள் நான் பத்திரிக்கையாளர்களிடம் பேசாமல் இருந்தேன்.