மாட்டிக்கொண்ட நேபாள அணி.... Record break பண்ண ஜடேஜா, ரோஹித்..!!
நேற்று நேபாள அணிக்கு எதிராக நடைபெற்ற ஆசிய கோப்பை போட்டியில், இந்திய அணி 10 விக்கெட் வித்தியசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
ஒரு நாள் தொடரில் பெரிதாக அனுபவமில்லாத நேபாள அணிக்கு எதிராக போட்டியில் இந்திய அணி முதலில் பந்துவீச, துவக்கத்தில் சிறிது தடுமாறி, பின்னர் சுதாரித்து கொண்டு அடுத்தடுத்த விக்கெட்டுகளை வீழ்ந்து நேபாள அணியை 230 ரன்களுக்கு ஆல் அவுட் செய்தனர்.
பின்னர் மழை குறுக்கிட போதிலும், duckworth lewis முறைப்பட இந்திய அணி 20.1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 147 ரன்களை எடுத்து எளிதில் வெற்றி பெற்றது. ரோஹித் சர்மா 74(59), இஷான் கிஷன் 67(62) எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
ஜடேஜா ரோஹித் சாதனை
இந்தப் போட்டியில் இந்திய அணியின் ரவீந்திர ஜடேஜா 10 ஓவர்களில் 40 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார். இதன் மூலம், ஜடேஜா ஆசிய கோப்பை ஒருநாள் போட்டிகளில் 22 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணிக்காக அதிக விக்கெட்களை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தை இர்பான் பதானுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.
அதே நேரத்தில், இடது கை சுழற் பந்துவீச்சாளராக அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதல் இடத்தை இலங்கையின் ஜெயசூரியா மற்றும் பாகிஸ்தானின் அப்துர் ரசாக்குடன் ஜடேஜா பகிர்ந்து கொண்டுள்ளார்.
மறுபுறம், இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா நேற்றைய போட்டியில் 6 பவுண்டரி, 5 சிக்சர்களுடன் 74 ரன்கள் அசத்தினார் .இதன் மூலம் ஆசிய கோப்பை தொடரில் 10 அரைசதங்களுடன் இந்திய அளவில் இத்தொடரில் அதிக அரைசதம் அடித்த வீரர் என்ற பெருமையையும், சர்வதேச அளவில் இரண்டாமிடத்தையும் ரோஹித் பெற்றுள்ளார்.
மேலும், நேற்றைய போட்டியில் 74 ரன்கள் அடித்ததுடன், ஆசிய கோப்பை தொடர்களில் 1101 ரன்கள் குவித்துள்ள ரோஹித் சர்மா, அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் இரண்டாமிடம் பெற்றுள்ளார். இந்த பட்டியலில் 1220 ரன்களுடன் இலங்கையின் ஜெயசூரியா முதலிடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.