அய்யோ... என்ன அழகு... - மனைவியை புகழ்ந்து தள்ளிய ரசிகருக்கு போபண்ணாவின் பதில்...!

Tennis Viral Photos
By Nandhini 1 மாதம் முன்

சானியா மிர்சா அதிர்ச்சி தோல்வி

சமீபத்தில் தனது டென்னிஸ் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற உள்ளதாக அறிப்பை வெளியிட்டிருந்தார் சானியா மிர்சா.

இந்நிலையில், மெல்போர்னில் நடைபெற்று வரும் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திலிய ஓபன் டென்னிஸ் போட்டி தொடர் நடைபெற்று வருகிறது. இதில் சானியா மிர்சா பங்கேற்று விளையாடினார்.

இப்போட்டியில் இந்தியா சார்பில் கலப்பு இரட்டை பிரிவில் முன்னணி வீராங்கனை சானியா மிர்சாவும், ரோகன் போபண்ணாவும் பங்கேற்று விளையாடினர். கலப்பு இரட்டையர் பிரிவின் இறுதிப்போட்டி கடந்த 27ம் தேதி நடைபெற்றது. இப்போட்டியில் வெற்றியுடன் விடைபெற வேண்டும் என்றிருந்த சானியா மிர்சாவின் கனவு தகர்ந்தது. இதனால், கண்ணீருடன் சர்வதேச டென்னிஸ் கிராண்டஸ்லாம் போட்டிகளுக்கு விடை கொடுத்துள்ளார் சானியா மிர்சா.

rohan-bopanna-wife-beauty-tennis

ரசிகருக்கு போபண்ணாவின் பதில்

இப்போட்டி காண்பதற்காக, வருகை தந்திருந்த ரோகன் போபண்ணாவின் மனைவி சுப்ரியா அனன்யா, மைதானத்தில் தன்னுடைய கணவர் ரோகன் போபண்ணாவையும், சானியா மிர்சாவையும் உற்சாகப்படுத்திக் கொண்டே இருந்தார்.

இவர்கள் இருவரும் தோல்வி அடைந்த பிறகுகூட, இரண்டு பேரின் விளையாட்டுக்கு அவர் பாராட்டு தெரிவிக்கும் வண்ணம் கைத்தட்டி வரவேற்பு கொடுத்தார்.

அப்போது எடுக்கப்பட்ட அனன்யா சுப்ரியாவின் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவியது.

இந்த புகைப்படத்தைப் பார்த்த நெட்டிசன் ஒருவர், இவர் ரோகன் போபண்ணாவின் மனைவியா? என்ன அழகு... நான் பார்த்ததில் மிகவும் அழகான பெண் இவர்தான் என்று புகழாரம் சூட்டினார்.

இப்பதிவுக்கு பதிலளித்து ரோகன் போபண்ணா பேசுகையில், இதனை நான் ஏற்றுக் கொள்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார். தற்போது இவரின் பதிவு சமூகவலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.   


தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.