அதிக வயதில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் - வரலாற்று சாதனை படைத்த இந்திய வீரர்!

Tennis Australia India Sports
By Jiyath Jan 28, 2024 03:25 AM GMT
Report

அதிக வயதில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற வீரர் என்ற சாதனையை ரோகன் போபண்ணா படைத்துள்ளார்.

டென்னிஸ் தொடர் 

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான  ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது.

அதிக வயதில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் - வரலாற்று சாதனை படைத்த இந்திய வீரர்! | Rohan Bopanna Scripts History Australian Open

இந்த தொடரில் ஆண்கள் இரட்டையர் இறுதிச் சுற்றில் ரோகன் போபண்ணா (இந்தியா) - மேத்யூ எப்டென் (ஆஸ்திரேலியா) இணை, இத்தாலியின் சிமோன் போலெலி - ஆன்ரீயா வவாசோரி இணையை எதிர்கொண்டது.

சாதனை

1 மணி நேரம் 39 நிமிடங்கள் நடந்த இப்போட்டியில் 7-6, (7-0), 7-5 என்ற செட்களில், ரோகன் போபண்ணா - மேத்யூ எப்டென் இணை சாம்பியன் பட்டம் வென்றது.

அதிக வயதில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் - வரலாற்று சாதனை படைத்த இந்திய வீரர்! | Rohan Bopanna Scripts History Australian Open

இதன் மூலம் அதிக வயதில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற வீரர் என்ற சாதனையை ரோகன் போபண்ணா (43) படைத்துள்ளார். முன்னதாக பிரெஞ்சு ஓபன் டென்னிசில் இரட்டையர் சுற்றில் 40 வயதில் பட்டம் வென்ற நெதர்லாந்து வீரர் ஜீன் - ஜுலியன் ரோஜர் என்ற வீரரே அதிக வயதில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.