விம்பிள்டன் போட்டியில் உலக சாதனைப் படைத்த ஃபெடரர்..!

Wimbledon tennis Roger Federer
By Petchi Avudaiappan Jul 06, 2021 11:07 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in டென்னிஸ்
Report

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் நட்சத்திர வீரர் ரோஜர் பெடரர் புதிய உலக சாதனையை படைத்துள்ளார் . 

உலக புகழ்பெற்ற விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் இங்கிலாந்தின் லண்டன் நகரில், நடைபெற்று வருகிறது. இதில் ஸ்விட்சர்லாந்தை சேர்ந்த நட்சத்திர வீரர் ரோஜர் ஃபெடரர் காலிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.

நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியில் இத்தாலியின் லாரன்சோ சொனாகாவை எதிர்த்து ஃபெடரர் களமிறங்கினார். இதில் முதல் சுற்றில் சற்று சிரமப்பட்டு விளையாடிய ஃபெடரர் பின்னர் 2வது மற்றும் 3வது செட்களில் சிறப்பாக விளையாடினார். அவர் 7-5, 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில் லாரன்சோ சொனாகாவை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதிப்பெற்றார்.

தற்போது 39 வயதாகும் ரோஜர் ஃபெடரர் இந்த வெற்றியின் மூலம் விம்பிள்டன் தொடரில் 18 வது முறையாக காலிறுதிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் விம்பிள்டன் போட்டியில் காலிறுதிக்கு முன்னேறிய அதிக வயதுகொண்ட வீரர் என்ற பெருமையையும் ரோஜர் ஃபெடரர் பெற்றுள்ளார்.

இதற்கு முன்னர் கடந்த 1974 ஆம் ஆண்டு நடைபெற்ற விம்பிள்டனில் கென் ரோஸ்வால் (39 வருடம், 244 நாட்கள்) காலிறுதிக்கு முன்னேறியிருந்தார். இந்நிலையில் தற்போது ஃபெடரர் (30 வருடம், 337) வயதில் நுழைந்துள்ளார். இதன் மூலம் அவர் உலக சாதனைப் படைத்துள்ளார்.