நயன்தாரா -விக்னேஷ் சிவன் படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது : மகிழ்ச்சியில் ரசிகர்கள்

Nayanthara RockyTheFilm RowdyPictures
By Irumporai Dec 07, 2021 06:18 AM GMT
Report

ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ராக்கி' படத்தின் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விக்னேஷ் சிவன், நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் ரிலீசுக்கு தயாராக உள்ள படம் 'ராக்கி'. கடந்த ஆண்டே இந்தப்படத்தின் டிரெய்லர் வெளியாகி, ரசிகர்களின் மிக நீண்ட எதிர்பார்ப்பில் உள்ளது. இந்நிலையில் இந்தப்படத்தின் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ராமின் 'தரமணி' படத்திற்கு பிறகு அனைவராலும் அறியப்பட்ட நடிகர் வசந்த் ரவி 'ராக்கி' படத்தில் லீட் ரோலில் நடித்திருக்கிறார். பாரதிராஜா, ரவீனா ரவி, ரோகினி உள்ளிட்ட பலர் இதில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். என்னை நோக்கி பாயும் தோட்டா படத்திற்கு இசையமைத்திருந்த தர்புகா சிவா இந்த படத்திற்கு இசை அமைத்துள்ளார்.

கடந்த ஆண்டு வெளியான இந்தப் படத்தின் ட்ரெய்லருக்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்தது. படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்து, சென்ற ஆண்டே 'ராக்கி' வெளியாக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தது.

கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டு படங்கள் பல ரிலீஸ் ஆகாமல் இருந்தது. அந்த வரிசையில் 'ராக்கி' படமும் வெளியாகாமல் முடங்கிப் போனது.

இந்த நிலையில், ராக்கி' படம் கிறிஸ்துமஸ் விடுமுறையை ஒட்டி வருகிற டிசம்பர் மாதம் 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதனை விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.