'ராக்கி' படத்தில் வில்லனாக தூள் கிளப்பிய பாரதிராஜாவை நேரில் அழைத்து பாராட்டினார் ரஜினிகாந்த்

rajini meeting movie bharathiraja rocky
By Nandhini Dec 26, 2021 05:50 AM GMT
Report

'ராக்கி' படத்தில் வில்லனாக நடித்திருக்கும் இயக்குநர் பாரதிராஜாவுக்கு நடிகர் ரஜினி நேரில் அழைத்து பாராட்டி இருக்கிறார். நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள படம் தான் ‘ராக்கி’. இப்படத்தில் வசந்த் ரவி ஹீரோவாக நடித்துள்ளார்.

இயக்குனர் பாரதிராஜா வில்லனாக நடித்திருக்கிறார். இப்படம் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்துள்ளது. தற்போது இப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. வழக்கமான கேங்ஸ்டர் கதையாக இல்லாமல் வித்தியாசமான கதைக்களத்தில் இப்படம் உருவாகி இருக்கிறது.

கொலைக்கு பழிக்கு பழி வாங்கும் இரு கேங்ஸ்டர் குழுக்களுக்களுக்கான மோதலை தனது இயல்பான திரைக்கதையால் ரத்தம் சொட்ட சொட்ட காட்டியுள்ளார் இயக்குனர். இந்த படத்தின் ஹீரோ வசந்த் ரவி சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

தற்போது இப்படத்தை ரசிகர்கள் மற்றும் சினிமாத்துறையினர் பாராட்டி வருகின்றனர். இயக்குனர் பாரதிராஜா வில்லனாக சூப்பராக நடித்துள்ளார். அவருடைய ஸ்டைல், மாஸ், வசன உச்சரிப்பு, கோபம், ஆக்ரோஷம்‌ என தனக்கே உரித்தான பாணியில் ரசிகர்களை கவந்திருக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தை சமீபத்தில் பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாரதிராஜா நடிப்பை பார்த்து வியந்திருக்கிறார்.

இதனையடுத்து, பாரதிராஜா மற்றும் படத்தின் ஹீரோ வசந்த் ரவி ஆகியோரை நேரில் அழைத்து வெகுவாக பாராட்டி இருக்கிறார் ரஜினிகாந்த். இந்த நிகழ்வின் புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.