பனங்காட்டுப்படை கட்சியின் தலைவர் ராக்கெட் ராஜா கைது : காரணம் என்ன?
பனங்காட்டுப்படை கட்சியின் தலைவர் ராக்கெட் ராஜாவை போலீசார் கைது செய்தனர்.
கொலை வழக்கு
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே கடந்த ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதி மஞ்சங்குளம் கிராமத்தில் வசிக்கும் சாமிதுரை என்பவர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார்.இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சாமிதுரை கொலை வழக்கில் பனங்காட்டு படை கட்சியின் தலைவர் ராக்கெட் ராஜா தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். நெல்லை மாவட்டம் திசையன்விளை ஆணைக்குடி கிராமத்தைச் சேர்ந்த ராக்கெட் ராஜ மீது ஏற்கனவே இரு கொலை வழக்குகள் உள்ளன.
ராக்கெட் ராஜா கைது
சாமிதுரையை கொலை செய்த வழக்கில் ஏற்கனவே இரண்டு பேர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ள நிலையில் திருவனந்தபுரத்தில் தலைமறைவாகியிருந்த ராக்கெட் ராஜாவை நெல்லை காவல்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
கடந்த சில நாட்ச்களுக்கு முன்பு பனங்காட்டு படை கட்சியின் பிரமுகர் ஹரி நாடார் கைது செய்யப்பட்டு பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ராக்கெட் ராஜாவும் கைது செய்யப்பட்டுள்ளார். ராக்கெட் ராஜா கைது செய்யப்பட்ட செய்தி நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.