பூமியை நோக்கி வந்த ராக்கெட் - கொக்கி போட்டு பிடித்த ஹெலிகாப்டர் - வைரலாகும் வீடியோ - குவியும் பாராட்டு

Viral Video
By Nandhini May 03, 2022 10:08 AM GMT
Report

பூமியை நோக்கி வரும் ராக்கெட்டை தனியார் ஸ்பேஸ் நிறுவனம் ஒன்று ஹெலிகாப்டர் மூலம் கேட்ச் பிடித்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ராக்கெட் லேப் நிறுவனம் ஒரு புதிய சாதனையை தற்போது படைத்துள்ளது. நேற்று துப்பாக்கி குண்டு போல வேகமாக பூமியை நோக்கி வந்த ராக்கெட்டை ஹெலிகாப்டர் மூலம் கொக்கி போட்டு பிடித்திருக்கிறார்கள்.

ராக்கெட் லேப் நிறுவனத்தின் இந்த எலக்ட்ரான் ராக்கெட்டின் முதல் ஸ்டேஜ் மீண்டும் ஆய்வகத்திற்கு எடுத்து செல்லப்பட உள்ளது. அடுத்த கட்ட ஆபரேஷனுக்கு இந்த ராக்கெட்டை பயன்படுத்தப்பட உள்ளது.

ராக்கெட் லேப் நிறுவனத்தின் இந்த சாதனையை மக்கள் பாராட்டி வருகிறார்கள். தற்போது இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ -