ஆஸ்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க மறுக்கும் கிறிஸ் ராக் ?
ஆஸ்கர் விருது நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கான வாய்ப்பை கிறிஸ் ராக் நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆஸ்காரில் அறை சம்பவம்
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல் நகரில் கடந்த மார்ச் மாதம் 94-வது ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.இதில் சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருது ஹாலிவுட் நடிகர் வில்ஸ்மித்திற்கு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியினை பிரபல காமெடி நடிகரான கிறிஸ் ராக் தொகுத்து வழங்கினார்.அப்போது ராக் , வில்ஸ்மித்தின் மனைவி ஜடா பிங்கெட்டின் தலைமுடு குறித்து கிண்டல் செய்தார். இதனால் கோபமடைந்த வில் ஸ்மித் மேடைக்கு சென்று ராக்கின் கன்னத்தில் அறைந்தார் .
வாய்ப்பை நிராகரித்த ராக்
சக நடிகரை வில் ஸ்மித் ஆஸ்கார் அரங்க நிகழ்ச்சியில் அறைந்தது உலக அளவில் பேசு பொருளானது.அதே சமயம் ராக்கினை பொது வெளியில் வைத்து அறைந்தமைக்கு மன்னிப்பு கேட்டார்.
இந்த நிலையில்அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஆஸ்கர் விருது நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கான வாய்ப்பை கிறிஸ் ராக் நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.