தூக்கத்திலேயே ஏற்பட்ட சோகம்..! மறைந்த பிரபல ராக்கி பட நடிகர்..!

Actors Hollywood
By Karthick Feb 04, 2024 09:49 AM GMT
Report

அமெரிக்காவில் ராக்கி பட புகழ் நடிகர் கார்ல் வெதர்ஸ் தனது 76வது வயதில் காலமானார்.

கார்ல் வெதர்ஸ்

Magnum Force என்ற ஆங்கில படத்தில் 1973ஆம் ஆண்டு நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் கார்ல் வெதர்ஸ் (Carl Weathers). சில்வெஸ்டர் ஸ்டாலோனின்(Sylvester Stallone) பிரபலமான 'ராக்கி' படங்களில் வெளியான 4 பாகங்களிலும் நடித்து புகழ்பெற்றார்.

rock-movie-fame-carl-weathers-dies-naturally

அதுமட்டுமின்றி ஹாலிவுட் சூப்பர்ஸ்டார் என போற்றப்படும் அர்னால்டுடன் இணைத்து உலகளவில் மெகா பிளாக்பாஸ்டர் ஹிட்டடித்த Predator படத்தில் நடித்து உலகளவிலும் பிரபலமாகினார் கார்ல்.

பிரபல ஹாலிவுட் நடிகர் தனது 2 மகள்களுடன் விமான விபத்தில் பலி - அதிர்ச்சி சம்பவம்!

பிரபல ஹாலிவுட் நடிகர் தனது 2 மகள்களுடன் விமான விபத்தில் பலி - அதிர்ச்சி சம்பவம்!

மரணம் 

தொடர்ந்து திரைப்படங்களில் 2014ஆம் ஆண்டுவரை நடித்து வந்த கார்ல், அதன் பிறகு படங்களில் நடிப்பதை குறைத்து கொண்டார். கடைசியாக 2023ஆம் ஆண்டு வரை The Mandalorian தொடரில் நடித்திருந்தார்.

rock-movie-fame-carl-weathers-dies-naturally

தற்போது 76 வயதான கார்ல், லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள அவரது வீட்டில் தூக்கத்திலேயே இறந்துவிட்டதாக கார்ல்லின் மேலாளர் Matt Luber தெரிவித்துள்ளார்.