வீட்டில் கிளி வளர்த்த நடிகர் ரோபோ சங்கர் மீது வழக்குப்பதிவு - ரூ.2.5 லட்சம் அபராதம் விதித்ததால் பரபரப்பு
நடிகர் ரோபோ சங்கர் வீட்டில் கிளி வளர்த்ததற்காக ரூ.2.5 லட்சம் அபராதம் விதித்து வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மரம், செடி மற்றும் செல்லப்பிராணிகளை வளர்க்க ஆசைப்படும் மக்கள்
நம்மில் பெரும்பாலானோர் வீடுகளை அழகாகவும் இயற்கையுடன் ஒன்றிணைந்து வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கும். இந்த ஆசையினால் புது வீடு கட்டுவோர் தங்கள் புது இல்லங்களை கட்ட ஆரம்பிக்கும் முன் வீட்டின் முன்பு செடிகள் நடுவது போன்ற செயல்களில் ஈடுபடுவர்.
மேலும் தங்கள் புதிய மற்றும் குடியிருக்கும் வீடுகளை அழகுப்படுத்த பல முயற்சிகளில் ஈடுபடுவது வழக்கம். அதன் ஒரு பகுதியாக வீடுகளில் மீன் தொட்டி வைப்பது, செல்லப்பிராணிகளை வளர்ப்பது போன்றவற்றில் மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ரோபோ சங்கரு அபராதம்
அதிலும் குறிப்பாக சினிமா நடிகர்கள் என்றால் சொல்லவா வேண்டும்.. திரைப்பிரபலங்கள் தங்கள் இல்லங்களில் மரங்களை நடுவது செல்லப்பிராணிகளை வளர்ப்பது போன்றவற்றில் கவனம் செலுத்துவர்.
அந்த வகையில் நகைச்சு நடிகர் ரோபோ சங்கர் தனது வீட்டில் அலெக்சாண்டிரியன் வகை கிளி வளர்த்து வந்துள்ளார். இது பற்றி அறிந்த வனத்துறையினர் ரோபோ சங்கருக்கு ரூ.2.5 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளனர்.
இந்த வகை கிளியை வீட்டில் வளர்ப்பது சட்டபடி குற்றம். வனத்துறையினரின் அனுமதியின்றி கிளி வளர்த்ததற்காக அபராதம் விதித்த நிலையில் அவர் மீது வழக்குப்பதிவும் செய்துள்ளனர்.