பாடி பத்து நிமிசத்துல வந்துருன்னு சொன்னாங்க...உருக்கமாக சொன்ன ரோபோ ஷங்கர்..!!
தான் 10 நிமிடத்தில் இறந்து விடுவேன் என தன்னிடமே கூறியதாக நடிகை ரோபோ ஷங்கர் உருக்கமாக பேட்டி அளித்துள்ளார்.
ரோபோ ஷங்கர்
தனியார் தொலைக்காட்சியில் நகைச்சுவை ஆர்டிஸ்டாக அறிமுகமாகி பின்னர் நடிகராக தன்னை வெள்ளித்திரையில் ரசிகர்கள் மனதில் பதியவைத்து கொண்டவர் ரோபோ ஷங்கர். நடிகராக இருக்கும் பட்சத்திலும் தனியார் நிகழ்ச்சியில் நடுவராகவும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து வருகின்றார்.
படங்களில் பிஸியாக நடித்து வந்த நிலையில், மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு 6 மாதங்களுக்கு மேலாக உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தார். தற்போது தான் அந்த நோயின் பாதிப்பில் இருந்து மீண்டுள்ள அவர், மெல்ல நிகழ்ச்சிகளில் பங்கெடுக்க துவங்கியுள்ளார்.
இறந்து விடுவேன் என்றார்கள்
இந்நிலையில் நிகழ்ச்சியில் ஒன்றில் பேசிய ரோபோ ஷங்கர், "ஒரு ஆறு மாதம் உடல் நலமில்லாமல் படுத்த படுக்கையாக இருந்தேன். அப்போது சில யூ டியூப் சேனல்கள், ரோபோ சங்கரின் உடல்நிலை மிகவும் மோசமாகிவிட்டது, நான் இறந்துவிட்டேன் என்றெல்லாம் சொன்னார்கள் என வருத்தத்துடன் பகிர்ந்து கொண்டார்.
நான் இருந்துவிட்டேன் என்றும் என் மனைவி, மகள் கதறி அழுகிறார்கள் என்று மிகத் தவறான, உண்மைக்கு புறம்பான செய்தி பரப்பினார்கள் என வேதனை தெரிவித்த அவர், அந்த சூழ்நிலையில் நானும் என் குடும்பமும் சொல்ல முடியாத வேதனை அடைந்தோம் என தெரிவித்தார்.
நான் உடலால் அடைந்த வேதனைகளைவிட மனதால் அடைந்த வேதனைகள்தான் அதிகம் என உருக்கத்துடன் தெரிவித்த ரோபோ ஷங்கர் இதோ உங்கள் முன்னால் மீண்டு வந்து நிற்கிறேன் என பெருமையாக தெரிவித்தார்.