ரொம்ப ஈசியா சான்ஸ் கிடைக்காது : உத்தப்பாவிடம் திட்டவட்டமாக கூறிய தோனி

csk msdhoni robinuthappa
By Irumporai Apr 08, 2022 03:39 AM GMT
Report

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் டோனியுடன் நடைபெற்ற சுவாரஸ்யமான சம்பவங்களை அந்த அணியின் நட்சத்திர வீரர் ராபின் உத்தப்பா தெரியப்படுத்தியுள்ளார்.

2021 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய இந்திய அணியின் அனுபவ வீரர் ராபின் உத்தப்பாவை சென்னை அணி டிரேடிங் மூலம் தனது அணியில் இணைத்துக் கொண்டது.

இந்த நிலையில் இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் நடத்தும் யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்த ராபின் உத்தப்பா சென்னை அணியின் முன்னாள் கேப்டன் தோனி இடையே நடைபெற்ற சுவாரசியமான விஷயங்கள் குறித்து பேசியுள்ளார்.

அதில் பேசிய அவர், தற்பொழுது நான் தோனியுடன் நடைபெற்ற சுவாரஸ்யமான பேச்சுவார்த்தைக்கு தெரியப்படுத்த விரும்புகிறேன். நான் அணியில் இணைந்த உடனேயே தோனியின் ஆடும் லெவனில் நேரடியாக இணையவில்லை.

தோனி, முதலில் இரண்டு மாதங்கள் பார்ப்போம் என்று கூறினார். அப்பொழுது அவர் என்ன கூற வருகிறார் என்பது எனக்கு புரியவில்லை, பின் அவர் என்னிடம் கூறினார், உனக்கான நேரம் வரும் அதுவரை பொறுத்திரு என்று கூறினார் .

தோனி பேசிய பிறகு 4-5 நாளுக்கு ஒருமுறை பயிற்சியாளர் அல்லது அணியில் உள்ளவர்கள் என்னிடம் வந்து உரையாடுவார்கள் என்று ராபின் உத்தப்பா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.