ஐபிஎல் 2021: சென்னை அணிக்காக களமிறங்கும் புதிய வீரர்... காத்திருக்கும் சர்ப்ரைஸ்
ஐபிஎல் தொடரின் 2 ஆம் பாதி ஆட்டங்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முதன் முதலாக களமிறங்கும் வாய்ப்பு உத்தப்பாவுக்கு கிடைத்துள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா தொற்றின் பாதிப்பு காரணமாக பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்ட நடப்பாண்டின் ஐபிஎல் தொடர் செப்டம்பர் 19 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கி நடைபெற உள்ளது.
அதற்காக அனைத்து ஐபிஎல் அணிகளும் ஆயத்தமாகி வரும் நிலையில் முதல் பாதி ஆட்டத்தில் வாய்ப்பு கிடைக்காத வீரர்களுக்கு இம்முறை வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் முதல் போட்டியில் மும்பை அணியுடன் மோதும் சென்னை அணியில் டு பிளசிஸுக்கு பதில், ருதுராஜ் கெய்க்வாட்டுடன் தொடக்க வீரராக உத்தப்பா களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை அணியில் ஏலம் எடுக்கப்பட்டதில் இருந்து இதுவரை ஒரு போட்டியில் கூட உத்தப்பாவுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. சென்னை சூப்பர் கிங்ஸ், அவர் ஐபிஎல் தொடரில் விளையாடும் 6வது அணியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.