நாயகன் மீண்டும் வரார் - மார்வெல் யூனிவர்சில் மீண்டும் இணைந்த RDJ - ஆனால் Iron Man இல்லை?
ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஒரு கதாபாத்திரமாக உள்ளது ஐயன் மேன்.
Iron Man
Marvel Cinematic Universe பெற்ற உச்சத்தை மீண்டும் ஒரு படம் எட்டுமா? என்றால் அது கேள்விக்குறி தான். குறிப்பாக 2008-ஆம் ஆண்டில் துவங்கி, 2019-ஆம் ஆண்டு வெளியான Avengers Endgame வரை அனைத்துமே மிக பெரிய வசூலை வாரி குவித்த வெற்றி படங்கள்.
Avengers படங்களில் இருந்த கதாபாத்திரங்களில் உலகளவில் கொண்டப்பட்ட கதாபாத்திரமாக மாறியது Iron Man. கதாபாத்திரமாகவே மாறினார் Robert Downey Jr. உலக ரசிகர்களால் ஆராதிக்கப்பட்ட அவரின் Iron man கதாபாத்திரம் Endgame படத்தின் இறுதி காட்சியில் மரணமடைந்து விடும்.
This Just In ‼️Robert Downey Jr. returns to Marvel as Victor von Doom in “Avengers: Doomsday!”#RobertDowneyJr. #Marvel #SDCC #CriticsChoice pic.twitter.com/iKJBQVI1LE
— Critics Choice Awards (@CriticsChoice) July 28, 2024
அது ரசிகர்களுக்கு பெரிய வருத்தமே. Endgame படத்திற்கு பிறகு வெற்றி படங்கள் இருந்தாலும், Marvel Cinematic Universe'இல் முன்னர் இருந்த ஒரு தாக்கம் சற்று குறைந்தே இருந்தது.
Doomsday
மீண்டும் ஒரு முறை Robert Downey Jr. வருவாரா என உலக ரசிகர்கள் காத்திருந்தார்கள். அவர்களுக்கு இன்ப செய்தி ஒன்று கிடைத்துள்ளது. அதாவது, அடுத்த Marvel Cinematic Universe-இன் Avengers universe'இல் மிக பெரிய வில்லனாக இருக்கும் Victor Von Doom கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார் Robert Downey Jr.
இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்து உலக ரசிகர்களை கோலாக்களத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த Avengers Doomsday - மே 2026 ஆம் ஆண்டும், Avengers SecretWars - மே 2027-ஆம் ஆண்டும் வெளிவர இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.