டாஸ்மாக் கடை சுவற்றில் ஓட்டை போட்டு மது அருந்திய கொள்ளையர்கள் இருவர் கைது...!
டாஸ்மாக் கடை சுவற்றில் ஓட்டைப் போட்டு கொள்ளையடிக்க முயற்சித்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஓட்டைப் போட்டு கொள்ளையடிக்க முயற்சி
திருவள்ளூர், கவரைப்பேட்டை அருகே டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. இந்த டாஸ்மாக் கடையை சதீஷ், முனியன் என்ற இரு கொள்ளையர்கள் நோட்டமிட்டு வந்தனர். இந்நிலையில், இவர்கள் இருவரும் நேற்று இரவு டாஸ்மாக் கடை சுவற்றில் ஓட்டை போட்டு உள்ளே நுழைந்துள்ளனர்.
இது குறித்து கவரைப்பேட்டை போலீசாருக்கு ரகசியத் தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் டாஸ்மாக் கடை சுவற்றில் ஓட்டைக்குள் எட்டிப்பார்த்தனர்.
அப்போது, டாஸ்மாக் கடைக்குள் உள்ளே நுழைந்த கொள்ளையர்கள், டாஸ்மாக் கடையில் இருந்த மது பாட்டிலை எடுத்து மது அருந்திக் கொண்டிருந்தனர்.
இதனையடுத்து, அவர்கள் இருவரையும் சுவற்றின் ஓட்டைக்குள்ளிலிருந்து வெளியே வர வைத்து போலீசார் கைது செய்தனர்.