திருமணத்திற்கு பெண் இருப்பதாகக் கூறி இளைஞர்களிடம் மோசடி

Tirupur Robbery gang
By Petchi Avudaiappan Jul 03, 2021 04:23 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in குற்றம்
Report

திருப்பூரில் திருமணத்திற்கு பெண் இருப்பதாகக்கூறி கேரள இளைஞர்களிடம் நூதன முறையில் நகை மற்றும் பணம் பறிப்பில் ஈடுபட்டதாக 5 பேரை கேரள மாநில காவல் துறையினர் கைது செய்தனர். 

கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஆலத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் என்பவர் திருமணத்திற்கு பெண் பார்த்து வந்த நிலையில், கேரள மாநில நாளிதழில் மணப்பெண் தொடர்பாக கடந்த மார்ச் மாதம் விளம்பரம் செய்து இருந்தார். இதனிடையே திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் இருந்து ராமகிருஷ்ணனை ஒருவர் அலைபேசியில் தொடர்பு கொண்டு மணப்பெண் இருப்பதாக கூறியுள்ளார். 

இதை நம்பிய ராமகிருஷ்ணன், கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி தனது நண்பர் பிரவீன் என்பவருடன் காரில் பல்லடம் வந்துள்ளார்.அப்போது அலைபேசியில் தொடர்புகொண்ட நபர், இருவரையும் அழைத்து சென்று ஒரு வீட்டில் உட்கார வைத்து விட்டு சென்றுள்ளார். சிறிது நேரத்தில் எட்டு பேர் கொண்ட கும்பல், இரண்டு பேரையும் சுற்றி வளைத்து கத்தியை காட்டி மிரட்டி, 7 சவரன் நகை, ஏ.டி.எம்-ல் இருந்த ரூ. 40 ஆயிரம் பணம் ஆகியவற்றை பறித்து கொண்டு திருப்பி அனுப்பினர்.

திருமணத்திற்கு பெண் இருப்பதாகக் கூறி இளைஞர்களிடம் மோசடி | Robbery Gang Arrest In Tirupur

இதையடுத்து ராமகிருஷ்ணன், ஆலத்தூர் காவல் துறையிடம் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து நடத்திய விசாரணையில் அந்த கும்பல் திருப்பூர் மத்திய காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

 அங்கு வந்த கேரள தனிப்படை காவல் துறையினர், பாலக்காடு கஞ்சிக்கோட்டையைச் சேர்ந்த விமல் , திருப்பூரை சேர்ந்த பிரகாஷ் , சிவா , விக்னேஷ் மற்றும் மணிகண்டன் ஆகிய ஐந்து பேரை கைது செய்து பாலக்காடு சிறையில் அடைத்தனர்.