நடு ரோட்டில் பணத்தை மூட்டை மூட்டையாக கொட்டிய கொள்ளையர்கள் - மகிழ்ச்சியடைந்த வாகன ஓட்டிகள்

Viral Video
By Thahir Oct 22, 2022 10:30 AM GMT
Report

கொள்ளையடித்த பணத்தை நடுரோட்டில் கொள்ளையர்கள் வீசிய நிலையில் அதை வாகன ஓட்டிகள் எடுக்க வந்த சம்வம் அரங்கேறியுள்ளது.

சாலையில் வீசப்பட்ட பணம் 

சிலி நாட்டின் சான்டியாகோ பகுதியில் ஒரு சூதாட்டக் கிளப்புக்குள் புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த பணத்தை மூட்டைகளில் கொள்ளையடித்துக் கொண்டு காரில் தப்பினர்.

இது குறித்து தகவல் அறிந்து காரை பின்தொடர்ந்து வந்த காவலர்களிடம் இருந்து தப்பிக்க வேறு வழி தொரியமால் முழித்த கொள்ளையர்கள், ஒரே இடத்தில் அதிகமான கார்கள் வந்து கொண்டிருந்த போது, பண மூட்டைகளில் சாலையில் வீசினர்.

Robbers who dumped money in bundles on the road

பணமூட்டை சாலையில் விழுந்த போது காற்றில் ரூபாய் நோட்டுகள் பறக்கத் தொடங்கியது. இதை பார்த்த வாகன ஓட்டிகள் தங்களது கார்களை நிறுத்திவிட்டு உடனடியாக சாலையில் கிடந்த பணத்தை மகிழ்ச்சியுடன் எடுத்தனர்.

Robbers who dumped money in bundles on the road

இதையடுத்து அந்த சாலையில் வாகனங்கள் அடுத்தடுத்து நிறுத்தப்பட்டனர்.பின்னர் அங்கு வந்த காவல்துறையினர் கொள்ளையர்களை கைது செய்ததுடன் சாலையில் கிடந்த பணத்தையும், வாகன ஓட்டிகள் எடுத்த பணத்தையும் பறிமுதல் செய்தனர்.