ஏடிஎம்ல் பணம் திருட முடியாததால் மெஷினோடு தூக்கி சென்ற கொள்ளையர்கள்? எங்கு நடந்தது தெரியுமா?
திருப்பூரில் ஏடிஎம் இயந்திரத்தில் கொள்ளையடிக்க முடியாததால் கொள்ளையர்கள் ஏடிஎம் மெஷினை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி சாலையில் பேங்க் ஆப் பரோடா வங்கியின் ஏடிஎம் ஒன்று செயல்பட்டுவருகிறது. ஆள் இல்லா நேரத்தில் ஏடிஎம்மிற்குள் புகுந்த முகமூடி அணிந்த கும்பல்.
ஏடிஎம்மை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றுள்ளனர்.ஆனால் ஏடிஎம் இயந்திரம் உடைக்க கடினமாக இருந்துள்ளது. அதனால் ஏடிஎம் இயந்திரத்தையே பெயர்த்து எடுத்துக் கொண்டு சென்றுள்ளனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்துள்ள போலீஸார் சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு கொள்ளையர்களை பிடிக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் விசாரணையை தொடங்கி நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கொள்ளைக்கு பயன்படுத்திய வாகனத்தை பெருந்துறை அருகே உள்ள விஜயமங்கலத்தில் விட்டுவிட்டு ஏடிஎம் இயந்திரத்தை மட்டும் வண்டியில் எடுத்துச் சென்றுள்ளனர்.

கடந்த 19ஆம் தேதி ஏடிஎம் இயந்திரத்தில் 15 லட்சம் ரூபாய் வைத்ததாகவும் நேற்றைய தினம் வரை குறைந்த பட்சமாக ஒன்று முதல் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை இருந்திருக்கலாம் என வங்கி சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது
பணம் கிடைக்காத ஆத்திரத்தில் ஏடிஎம் மெஷினையே கொள்ளை அடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.