‘சார்..50ரூ கீழ விழுந்திருக்கு பாருங்க’ - சாமர்த்தியமாக திசைத்திருப்பி லட்ச ரூபாயை அபேஸ் செய்த கொள்ளையர்கள்
ஐம்பது ரூபாய் நோட்டுகள் சாலையில் கீழே சிதறிக் கிடப்பதாக கூறி, கவனத்தை திசை திருப்பி பில்டிங் காண்ட்ராக்டரிடம் ஒரு லட்சம் ரூபாய் ரொக்க பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தியாகராஜன் என்பவர் திருநின்றவூரில் லேபர் காண்ட்ராக்ட் வேலை செய்து வருகிறார். இவர் திருநின்றவூர் ஐ.ஓ.பி. வங்கியிலிருந்து ஒரு லட்ச ரூபாய் எடுத்துக்கொண்டு, தன்னுடைய இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருதுள்ளார்.
அப்போது இவரை நோட்டமிட்டு பின்தொடர்ந்து அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், தங்களின் பணம் 50 ரூபாய் கீழே சிதறிக் கிடப்பதாக கூறி விட்டு சென்றுள்ளனர்.
இதனை அடுத்து தியாகராஜன் வாகனத்தை நிறுத்திவிட்டு, சிதறிக்கிடந்த ஐந்து, பத்து ரூபாய் நோட்டுகளை எடுத்துள்ளார். அப்போது அவருடைய இரு சக்கர வாகனத்தில் வைத்திருந்த ஒரு லட்ச ரூபாயை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
இந்தச் சம்பவங்கள் அனைத்தும் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளடு. இதனடிப்படையில் சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டு திருநின்றவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.