செயினை பறித்த கொள்ளையன் - 12 அடி உயர மாடியிலிருந்து கை தவறி விழுந்த 5 மாத குழந்தை - பின்பு நடந்த விபரீதம்
கடப்பா, ராமச்சந்திராபுரத்தைச் சேர்ந்தவர் பாரதி. இவர் இன்று காலை வீட்டில் மாடியிலிருந்து கையில் 5 மாத ஆண் குழந்தையுடன் இறங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது, திடீரென்று அங்கு வந்த கொள்ளையன் ஒருவன் பாரதியின் கழுத்தில் இருந்த செயினை பறிக்க முயற்சி செய்தார்.
கழுத்துச் சங்கிலி அவன் கையில் மாட்டிக்கவே அவனிடமிருந்து செயினை காப்பாற்ற முயன்ற போது, கை தழுவி 5 மாத குழந்தை 12 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்தது.
இதைப் பார்த்த கொள்ளையன் அங்கிருந்து உடனடியாக தப்பி ஓடிவிட்டான். அதிர்ச்சி அடைந்து பதறிப் போன பாரதி கீழே ஓடி வந்து தன் குழந்தையைப் பார்த்தாள்.
ஆனால், குழந்தை விழுந்த வேகத்தில் தலையில் பலத்த காயப்பட்டு, சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்துபோனது. பாரதியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம், பக்கத்தினர் குழந்தையைப் பாரத்து, உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இது குறித்து வழக்குப் பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தலைமறைவான கொள்ளையனை தீவிரமாக தேடி வருகின்றனர்.
கொள்ளையன் செயினை பறிக்க முயன்ற போது, கை தவறி கீழே விழுந்த குழந்தை பரிதாபமாக இறந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.