‘’ அந்த கங்கானாவின் கன்னங்களை விட மென்மையான சாலைகள் ‘’ காங்கிரஸ் எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு

கங்கானாவின் கன்னங்களை விட மென்மையான சாலைகள் அமைக்கப்படும் என ஜார்கண்ட் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ பேசியது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஜம்தாரா தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏ-வாக இருப்பவர் தான் இர்பான் அன்சாரி. இவர் 14 சாலைகள் அமைப்பது குறித்து நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் பேசிய இர்பான் அன்சாரி, ஜம்தாரா தொகுதியில் நடிகை கங்கனா ரனாவத்தின் கன்னங்களை விட மென்மையான சாலை அமைக்கப்படும் என கூறியுள்ளார். மேலும், உலகத்தரம் வாய்ந்த 14 சாலைகள் ஜம்தாரா தொகுதியில் அமைக்கும் பணி விரைவில் தொடங்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

நடிகை கங்கனா ரனாவத்தின் கன்னங்களுடன் சாலையை ஒப்பிட்டு பேசியதற்காக காங்கிரஸ் எம்எல்ஏ அன்சாரிக்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்