கார் பந்தயத்தின் போது துப்பாக்கிச் சூடு - 10 பேர் உயிரிழப்பு

Mexico Death
By Thahir May 21, 2023 08:43 AM GMT
Report

கார் பந்தயத்தின் போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் உயிரிழப்பு 

மெக்சிகோ நாட்டின் பஜா கலிபோர்னியா மாகாணம் என்செண்டா நகரில் உள்ள சென் வென்சிட்டி பகுதியில் நேற்று கார் பந்தயம் நடைபெற்றது.

இந்த கார் பந்தயத்தில் 50க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். மேலும் இந்த போட்டியை காண நுாற்றுக்கணக்கானோர் குவிந்திருந்தனர்.

road-racers-killed-injured-shootout-mexico

அப்போது திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. வேனில் வந்த கும்பல் கார் பந்தய வீரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இந்த துப்பாக்கிச்சூட்டில் கார் பந்தய வீரர்கள் பேர் உயிரிழந்தனர்.மேலும் 9 பேர் படுகாயமடைந்தனர். இந்த துப்பாக்கிச்சூட்டை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் தப்பியோடிய கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.