உடைக்க நெனச்சது என்னவோ தேங்கா தான் ஆனா உடஞ்சது தேங்கா இல்லங்க? -பாஜாக எம்எல்ஏ கண் முன்னே தெறித்து சிதறிய சாலை!

bjp uttar pradesh bijnor susi chaudhri road damage
By Swetha Subash Dec 05, 2021 09:21 AM GMT
Swetha Subash

Swetha Subash

in அரசியல்
Report

உத்தரப்பிரதேசத்தில் தேங்காய் உடைத்து புதிய சாலையை பாஜக எம்எல்ஏ திறந்து வைக்க சென்றபோது, தேங்காவிற்கு பதிலாக சாலை உடைந்து சிதறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசம், பிஜ்னூரின் கெடா கிராமத்திற்கு அருகே புதிதாக கட்டப்பட்டுள்ள சாலையின் ஒரு பகுதியில், அதன் திறப்பு விழாவிற்காக பாரதிய ஜனதா கட்சியின் எம்எல்ஏ சுசி சவுத்ரி தேங்காய் உடைத்தார்.

அப்போது, தேங்காவிற்கு பதிலாக சாலை உடைந்து ஜல்லிகள் சிதறியது.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே இருந்த எம்எல்ஏ சவுத்ரியின் கணவர் மௌசம் சவுத்ரி, புதிதாக அமைக்கப்பட்ட சாலையில் மண்வெட்டியைப் பயன்படுத்தியபோது, ​​சாலையின் மேற்பரப்பும் சிதையத் தொடங்கியது.

இந்த சம்பவத்தால் வருத்தமடைந்த சுசி சவுத்ரி தர்ணாவில் அமர்ந்து சாலையின் தரம் குறித்து அதிகாரிகளை திட்டி கட்டுமானத்தில் தரமற்ற பொருட்களைப் பயன்படுத்தியதாக ஊழியர்கள் குற்றம் சாட்டினார்.

மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், இந்த பாதை கட்டப்பட்டது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்ட எம்எல்ஏ தனது போராட்டத்தை முடித்துக்கொண்டு சாலையின் மாதிரிகளை சேகரிக்க அந்த இடத்தில் குழி தோண்டுவதற்கு அதிகாரிகளுக்கு அவரும் சேர்ந்து உதவி செய்தார்.