திண்டுக்கல்லில் பாமகவினர் சாலை மறியல்- உடனே வாக்குப்பதிவு நிறுத்தம்! நடந்தது என்ன?

election tamilnadu pmk Dindigul
By Jon Apr 06, 2021 04:49 PM GMT
Report

பாமகவினர் சாலை மறியல் செய்ததால் திண்டுக்கல்லில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள், பிரமுகர்கள், சினிமா நட்சத்திரங்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகிறார்கள்.

காலையிலேயே பிரபலங்கள் முதல் பாமர மக்கள் வரை அனைவருமே மிகவும் ஆர்வத்துடன் வாக்குப்பதிவு செய்து வருகிறார்கள். இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. திமுகவினர் பணப்பட்டுவாடா செய்ததாக பாமகவினர் சாலைமறியல் ஈடுபட்டனர். இதனால் அங்கு வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது.  


Gallery