NIA சோதனை சென்னை அண்ணாசாலையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் சாலை மறியல்
NIA சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் 20க்கும் மேற்பட்டோர் சாலைமறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
NIA அதிரடி சோதனை
தேசிய புலனாய்வு முகமை மற்றும் அமலாக்க இயக்குநரகம் 11 மாநிலங்களில் நேற்று இரவு முதல் சோதனை மேற்கொண்டு வருகிறது.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியாவின் அலுவலகம் மற்றும் அதன் நிர்வாகிகளின் இல்லங்களில் சோதனை நடத்தப்பட்டது.
இந்த நிலையில் பயங்கரவாதிகளை ஆதரித்ததாகக் கூறி, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கிட்டத்தட்ட 106 பேர் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதிகபட்சமாக கேரளாவில் (22) மகாராஷ்டிரா (20) மற்றும் கர்நாடகாவில் ( 20), தமிழ்நாடு (10), அசாம் (9), உத்தரப் பிரதேசம் (8), ஆந்திரப் பிரதேசம் (5), மத்தியப் பிரதேசம் (4) ஆகிய மாநிலங்களில் அதிகபட்சமாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
சாலை மறியல்
புதுச்சேரி மற்றும் டெல்லி (தலா 3) மற்றும் ராஜஸ்தான் (2). ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் கைது செய்யப்பட்டதை கண்டித்து அந்த அமைப்பைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் சென்னை அண்ணாசாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அங்கு வந்த போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினா் இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
சென்னை அண்ணா சாலையில் #பாப்புலர்ஃப்ரண்ட்ஆஃப் இந்தியா அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்@kalilulla_it @abm_tn @DonUpdates_in @rajakumaari @PFIOfficial @ZeeTamilNews pic.twitter.com/H63dpcVxZP
— Nowshath A (@Nousa_journo) September 22, 2022
கருப்பு நிற புடவையில் தொகுப்பாளினி டிடி வெளியிட்ட அசத்தல் புகைப்படங்கள்.. குவியும் லைக்குகள் Manithan
அமெரிக்க ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான் : மேலும் இரண்டு விமானங்கள் விரட்டியடிப்பு IBC Tamil