5 மாதமாக ரேஷன் அட்டை வழங்கதாதால் சாலை மறியல்
குடும்ப அட்டை வழங்காததால் வேலூரில் பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வேலூர் மாநகராட்சி பகுதிக்குட்பட்ட சேண்பாக்கம், சலவன்பேட்டை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொது மக்கள் குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்து 5-மாதங்கள் ஆவதாக கூறப்படுகிறது.
ஆனால், இதுவரை குடும்ப அட்டை வழங்கவில்லை என்றும் உடனே வழங்க கோரியும் வேலூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே ஆரணி சாலையில் சுமார் 150-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர்.
இதனால் மறியல் கைவிடப்பட்டது.
ஒரு மாதத்தில் குடும்ப அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததால் பொது மக்கள் கலைந்து சென்றனர்.