திடீரென சாலையை கடக்க முயன்ற நபர் - இருச்சக்கர வாகனம் மோதி தூக்கி வீசப்பட்ட திக்.. திக்... சிசிடிவி காட்சி வைரல்
திடீரென சாலையை கடக்க முயன்ற நபர் மீது இருச்சக்கர வாகனம் மோதிய விபத்தில் வாலிபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், புதுக்கடை அருகே அம்சி பகுதியை சேர்ந்தவர் சுபின். இவரும், அதே பகுதியை சேர்ந்த இவரது நண்பனான எட்வின் ஜிஜோ (21) ஆகியோர் சேர்ந்து நேற்று மாலை கருங்கலிலிருந்து புதுக்கடைக்கு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர்.
சுபின் பைக்கை ஓட்டி வர எட்வின் ஜிஜோ பின்னால் இருந்து வந்துள்ளார். இருவரும் வெள்ளையம்பலம் பகுதியில் வரும்போது அந்த பகுதியில் கடை நடத்தி வரும் ஒருவர் திடீரென சாலையை கடக்க முயன்றுள்ளார்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சுபின் அந்த நபர் மீது மோதாமல் இருக்க, தனது பைக்கை வெட்டி திருப்பிய போது கட்டுப்பாட்டை இழந்த பைக் அந்த நபர் மீது மோதி, சாலையில் ஓரம் வைக்கப்பட்டிருந்த சிமெண்ட் கற்கள் மீது மோதி, சாலையில் தூக்கி வீசப்பட்டார்.
இதில் 3 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து, உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 3 பேரையும், அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மீட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் பைக்கின் பின்னாலிருந்து வந்த எட்வின் ஜிஜோ சிகிட்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இருவருக்கு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது, இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.