‘’பாரம்பரியம் மிக்க தமிழகத்தின் ஆளுநராக பதவியேற்றதில் மகிழ்ச்சி” – ஆளுநர் ஆர்.என்.ரவி
தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ஆர்.என். ரவி பதவியேற்றுக்கொண்டார். சென்னை ராஜ்பவனில் நடந்த பதவி ஏற்பு விழாவில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் பெருமக்கள் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். தமிழகத்தின் புதிய ஆளுநராக பதவி ஏற்றுக்கொண்ட ஆர்.என்.ரவி ராஜ் பவனில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்:
அப்போது பேசிய அவர், ” பழம்பெருமை வாய்ந்த கலாச்சாரம் கொண்ட தமிழ்நாட்டின் ஆளுநராக பதவி ஏற்றது பெருமை அளிக்கிறது.மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு தமிழ்நாட்டில் உள்ளது. தமிழக அரசு சிறப்பாக செயல்படுகிறது.

ஆளுநர் பதவி என்பது விதிகளுக்கு உட்பட்டது. அதற்கேற்ப செயல்படுவேன். அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்கு உழைப்பேன்” என்றார்.