ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழக மக்கள் ஓட ஓட விரட்டுவார்கள் - ஆர்.எஸ். பாரதி விமர்சனம்
ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழக மக்கள் ஓட ஓட விரட்டுவார்கள் என்று திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி விமர்சித்துள்ளார்.
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிர்ப்பு
நேற்று கூடிய தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் தமிழக அரசு தயாரித்து கொடுத்த உரையில் இருந்த தலைவர்கள் மற்றும் அரசின் செயல்பாடுகள் குறித்த வார்த்தைகளை ( தமிழ்நாடு,அமைதிப்பூங்கா,சமூக நீதி,சுயமரியாதை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, சமத்துவம், பெண்ணுரிமை, மதநல்லிணக்கம், பல்லுயிர் ஓம்புதல், தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், திராவிட மாடல் ஆட்சி ) தவிர்த்துவிட்டு உரையாற்றிய நிலையில் அதற்கு முதலமைச்சர் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து ஆளுநர் ஆர்.என்.ரவி பாதியிலேயே பேரவையில் இருந்து வெளியேறினார்.
இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பல இடங்களில் ஆளுநர் ஆர்.என் ரவியின் உருவபொம்மைகள் மற்றும் உருவ படங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி ஆளுநரை விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் பேசுகையில்,
ஆர்.எஸ்.பாரதி விமர்சனம்
நாகாலாந்தில் இருந்து எப்படி ஓடி வந்தீர்களோ அது போல் தமிழக மக்களும் உங்களை ஓட ஓட விரட்டுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

பேராசிரியர் நூற்றாண்டு விழாவில் திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டு பேசியபோது, (1972 - 1973)ஆம் ஆண்டு நமக்கும் டெல்லிக்கும் ஒரு பிரச்சனை வந்தது.
அந்த நேரத்தில் கருணாநிதி, இந்திரா காந்தியை அழைத்து வந்து மேடையில் உட்கார வைத்து (உறவுக்கு கை கொடுப்போம், உரிமைக்கு குரல் கொடுப்போம்) என்றார்.
தற்போது, அவருடைய மகன் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் ஆளுநரையே ஓட விட்டிருக்கிறார். இன்று சட்டசபையில் இருந்து நீங்கள் ஓடியிருக்கிறீர்கள்.
நாகாலாந்தில் இருந்து எப்படி ஓடி வந்தீர்களோ அது போல் தமிழக மக்களும் உங்களை ஓட ஓட விரட்டுவார்கள். 1947 இல் இந்தியா சுதந்திரம் அடைந்த போது அரசியல் சட்டத்தை உருவாக்கும் பொறுப்பை அம்பேத்கரிடம் நேரு ஒப்படைத்தார்.
உங்கள் மாநிலத்தை சேர்ந்த ராஜேந்திர பிரசாத் அரசியலமைப்பு சட்ட வரைவு கமிட்டியின் தலைவராக அம்பேத்கரை நியமித்தார். அவர் எழுதிய சட்டத்தைதான் இன்று வரை 73 ஆண்டு காலம் நாம் கடைப்பிடித்து வருகிறோம்.
இந்த அரசியலமைப்பு சட்டத்தின்படி, ரிப்பன் பில்டிங்கில் ராஜாக்களும் கோடீஸ்வரர்களும் உட்கார்ந்திருந்த நாற்காலியில் சாதாரண குடிமகளான பிரியா ராஜனை உட்கார வைத்த பெருமை.
அரசியல் சட்டம் நமக்கு அளித்த உரிமை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.ஆளுநர் உரை என்பது அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு, முடிவு எடுக்கப்பட்டு அதை ஆளுநர் மாளிகைக்கு அனுப்புகிறார்கள்.
அது 5ஆம் தேதி ஆளுநருக்கு கிடைத்து, அதில் கையெழுத்திட்டு பின் 7ஆம் தேதி மாநில அரசுக்கு அனுப்பியிருக்கிறார். 7ஆம் தேதி படித்து பார்த்துவிட்டு சில திருத்தங்களையும் ஆளுநர் முன் வைத்தார்.
அதையும் மாநில அரசு செய்தது. ஆட்டுக்கு தாடி எதற்கு நாட்டுக்கு ஆளுநர் எதற்கு என அண்ணா ஏற்கெனவே சொல்லியுள்ளார் .ஆனால் அண்ணாவினுடைய பெயரையே ஆளுநர் தவிர்த்து பேசினார் என ஆர்.எஸ். பாரதி விமர்சித்தார்.
தமிழீழம் கோரும் புலம்பெயர்ந்தோருடன் தொடர்பில்லை : தென்னிலங்கையில் வெளிப்படுத்திய அர்ச்சுனா! IBC Tamil
டிசம்பர் மாத சிறப்பு பலன்கள்: சுக்கிர புத்திரர்களான ரிஷப ராசியினருக்கு எப்படி அமையப்போகிறது? Manithan
டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan