‘’ ரிக் வேதமும் திருக்குறளும் ஒன்றுதான்’’ - உலக திருக்குறள் மாநாட்டில் தமிழக ஆளுநர் ஆர். என். ரவி பேச்சு
கோவை, குனியமுத்தூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் குறள் மலைச்சங்கம் சார்பில் நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர். ஆர்.என்.ரவி தலைமை தாங்கி மாநாட்டினை தொடங்கி வைத்து உரையாற்றினார். மேலும் ஆளுநர் "கல்வெட்டில் திருக்குறள் 6" என்ற திருக்குறள் நூலினை வெளியிட்டார்.
இந்த விழாவில் தமிழக ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி பேசும்போது:
"நமது தேசம் புண்ணிய பூமி, சான்றோர்கள், சுதந்திர போராட்ட தியாகிகள், வாழ்ந்த நாடு.. திருக்குறளில் எவ்வாறு முறையாக வாழ்வது என்பது குறித்து கூறப்பட்டுள்ளது. திருக்குறளின் மகிமை பாதுகாக்க வேண்டும்.
திருக்குறள் நமது வாழ்க்கையை உயர்த்தும் ஏணியாக உள்ளது. வாழ்க்கையில் முன்னேற நல்ல செயல்களை பின்பற்றுங்கள். திருக்குறள் உலகிற்கு ஒரு உதாரணமாக உள்ளது என்று கூறினார்
. மேலும்இம்மாநாட்டில் 1330 திருக்குறளையும் மலையிலே கல்வெட்டில் பதித்து திருக்குறள் மலை உருவாக்கப்பட வேண்டும், மலையிலே கல்வெட்டில் பதிக்கப்படும் திருக்குறளை உலக நூலாக யுனெஸ்கோ நிறுவனம் அங்கீகரிக்க வேண்டும் என கூறிய ஆளுநர் ரவி .
திருக்குறளில் வரும் ஆதி பகவன் என்பதும் ரிக் வேதத்தில் வரும் பராமத்தாவும் ஒன்றுதான் என கூறினார்.
ர்.