துணைவேந்தர் மாநாட்டிற்கு அழைப்பு - திமுகவை வம்பிழுக்கும் ஆளுநர்
தமிழக அரசுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் கடந்த சில ஆண்டுகளாகவே மோதல் போக்கு நடைபெற்று வருகிறது.
துணைவேந்தர் மாநாடு
சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போடுவது என இடையூறுகளை கொடுப்பதாக திமுக அரசு குற்றம்சாட்டி வருகிறது. இதனையடுத்து, உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் மீது திமுக வழக்கு தொடர்ந்தது.
வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், 10 சட்ட முன்வடிவுகளுக்கு ஒப்புதல் அளித்தது. அதன்படி பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தரை தமிழக அரசே நியமிக்கும் என அறிவிக்கப்பட்டது.
மேலும் பல்கலைக்கழகங்களுக்கு ஆளுநர் வேந்தராக இருந்த நிலையில் தற்போது முதலமைச்சர் ஸ்டாலின் வேந்தர் எனவும் தகவல் பரவியது.
இந்த சூழ்நிலையில் ஆளுநர் ரவி பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டை உதகையில் நடத்த ஏற்பாடு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சிறப்பு விருந்தினராக துணை குடியரசு தலைவர் ஜகதீப் தன்கர் பங்கேற்கவுள்ளார்.
இந்த மாநாடு ஏப்ரல் 25 முதல் 27ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த அழைப்பை, துணை வேந்தர்கள் புறக்கணிக்க வேண்டுமென அரசியல் கட்சிகள் தெரிவித்து வருகிறது.
இது தொடர்பாக ஆளுநர் மாளிகை கொடுத்துள்ள விளக்கத்தில் உச்சநீதிமன்ற உத்தரவின் படி ஆளுநர் ரவி துணை வேந்தர்களை புதிதாக நியமிக்க மட்டுமே முடியாது. இருந்த போதும் பல்கலைக்கழக வேந்தராக ஆளுநர் ரவியே தொடர்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.