திராவிட இயக்க தலைவர் ஆர்.எம்.வீரப்பன் மருத்துவமனையில் அனுமதி
திரைப்பட தயாரிப்பாளரும், திராவிட இயக்கத்தின் மூத்த தலைவருமான ஆர்.எம்.வீரப்பன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆர்.எம்.வீரப்பன்
தமிழ் திரைப்படங்களின் பழம்பெரும் தயாரிப்பாளர் ஆர்.எம்.வீரப்பன். பெரியார் - அண்ணா, எம்.ஜி.ஆர், சிவாஜி, கலைஞர் என தமிழகத்தின் பல முக்கிய பிரமுகர்களுடன் நெருங்கிய நட்பு வட்டாரத்தில் இருந்த ஆர்.எம்.வீரப்பன், தற்போது வயதின் காரணமாக பொதுவாழ்வில் இருந்து விலகி உள்ளார்.
ரஜினிக்கு திருப்புமுனைகளாக அமைந்த ராணுவ வீரன், மூன்று முகம், பாட்ஷா போன்ற படங்களையும் தயாரித்துள்ள ஆர்.எம்.வீரப்பன், திரைப்பட துறையை தாண்டி அரசியலிலும் பெரும் பங்கினை செலுத்தியுள்ளார்.
மருத்துவமனையில் அனுமதி
அதிமுக உருவாக முக்கிய நபராக கருதப்படும் ஆர்.எம்.வீரப்பன், 1977-ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு, தமிழக சட்டமன்றத்திற்கு தேர்வாகினர். அதிமுகவில் இருந்து பிரிந்து வந்த இவர் பின்நாளில் எம்.ஜி.ஆர் கழகம் என்ற கட்சியை நிறுவி, திமுகவுடன் நெருங்கிய வட்டாரத்தில் இருந்தார்.
98-வயதாகும் முன்னாள் அமைச்சரான இவர், தற்போது உடல்நலக் குறைவால் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடைய உடல்நிலை குறித்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின், தொலைபேசியில் கேட்டறிந்து கொண்டதாக கூறப்படுகின்றது.