Interpol உதவியை நாடிய TN போலீஸ் - விரைவில் கைதாகும் ஆர்.கே.சுரேஷ்??
ஆருத்ரா மோசடி வழக்கில் துபாயில் பதுங்கி இருக்கும் அந்நிறுவனத்தின் இயக்குனர்களை கைது செய்ய தற்போது தமிழக காவல்துறை புதிய முறையை கையாண்டுள்ளது.
ஆருத்ரா வழக்கு
ஆருத்ரா கோல்டு நிறுவனத்தில் 1 லட்சம் முதலீடு செய்தால், மாதம் ரூ.36 ஆயிரம் தருவோம் என்றும் 10 மாதம் உங்களுக்கு 3.6 லட்சம் கிடைக்கும் என்று விளம்பரம் செய்தனர். இதை நம்பி முதலீடு செய்த மக்களை அந்த நிறுவனம் கடைசியில் ஏமாற்றியது என பல புகார்கள் எழுந்தன.
அதனை தொடர்ந்து, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கைகளில் இறங்கின. இந்நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவரான ராஜசேகரின் சொத்துக்களை அனைத்து அசையா சொத்துக்களையும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரின் வசம் வந்தது.
அதே நேரத்தில், ஏலம் விடப்பட்டு கிடைக்கும் பணத்தின் மூலம், முதலீட்டாளர்களுக்கு பணம் திரும்ப கொடுக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
ஆர்.கே.சுரேஷ் கைதாவாரா?
இந்தநிலையில், இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான ராஜசேகர் மற்றும் மகாலட்சுமி ஆகியோரும் துபாயில் பதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவருக்கும் “லுக் அவுட்" நோட்டீஸ் அளிக்கப்பட்டிருக்கும் நிலையில், இவர்களை கைது செய்ய சர்வதேச போலீசான Interpol காவலர்களின் உதவியை நாடியுள்ளதாக கூறப்படுகிறது.
அதே நேரத்தில், சென்னையில் ஆருத்ரா நிதி நிறுவனம் மோசடி வழக்கு விசாரணை நடக்கும் நீதிமன்றத்தின் ஒப்புதல் பெற்று, அதை துபாய் நீதிமன்றத்தில் காவல் துறையினர் சமர்ப்பிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. அவ்வாறு துபாய் காவல் துறையின் உதவியை அவர்கள் நாடினால், துபாயில் பதுங்கிருப்பதாக கூறப்படும், ஆர்.கே.சுரேஷும் கைது செய்யப்படலாம்.