பாகிஸ்தான் வீரர் செய்த காரியம்; அம்பயர் எடுத்த அதிரடி முடிவு - வைரலாகும் Video!
முகமது ரிஸ்வான்
பாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 224 ரன்கள் குவித்தது.
இதனையடுத்து 225 என்ற வெற்றி இலக்கை நோக்கி பாகிஸ்தான் அணி ஆடிக்கொண்டிருந்தது. அப்போது அந்த அணியின் துவக்க வீரர் முகமது ரிஸ்வான், பந்தை அடித்து விட்டு பேட்டை கீழே தவறவிட்டு வெறுங்கையுடன் சிங்கிள் ரன் எடுக்க ஓடினார்.
ஷார்ட் ரன்
மறுமுனையில் கீழே குனிந்து கைவிரல்களை வைத்து கிரீஸை தொட முயன்றார். ஆனால், அவரது கிரீஸில் விரல் படவில்லை. இதை சரியான கவனித்த அம்பயர் ஷார்ட் ரன் எனக் கூறி ஒரு ரன்னை வழங்கவில்லை.
அம்பயரின் முடிவால் ஏமாற்றத்தை வெளிப்படுத்தும் லுக்கை வெளியிட்டார் ரிஸ்வான். மேலும் இந்த போட்டியில் 179 ரன்கள் மட்டுமே எடுத்து 45 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்தது.
— Nihari Korma (@NihariVsKorma) January 17, 2024