“எத்தனை மொழி வேணாலும் கத்துக்கலாம்; ஆனால் இந்தி திணிப்பு ஏத்துக்க முடியாது” - நடிகர் ரியாஸ் கான்
இளையராஜா பாக்யராஜ் போன்றவர்கள் பேசுவது அவர்களின் விருப்பம் பல மொழிகளை கற்றுக் கொள்வதில் தவறில்லை ஆனால் அதை திணிப்பது தான் தவறானது இந்தி மொழி குறித்து நடிகர் ரியாஸ் கான் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் இளம் திரைப்பட இயக்குநர் ஆசிக் ஜினு இயக்கி கலைச்செல்வி கோப்பையா தயாரிப்பில் நடிகர் ரியாஸ் கான் நடித்த திருமதி செல்வி படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை சேப்பாக்கம் நிருபர்கள் மன்றத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் நடிகர் ரியாஸ் கான், இயக்குநர் ஆசிக் ஜினு மற்றும் தயாரிப்பாளர் கலைச்செல்வி கோப்பையா ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இளம் இயக்குநர் ஆசிக் ஜினு, இந்த படம் என்னுடைய முதல் படம் இதில் ரியாஸ் கான் போன்ற பெரிய நடிகரை அணுகும் போது கொஞ்சம் பயமாக தான் இருந்தது ஆனால் அவர் மிகவும் நன்றாக பழக கூடியவர் என்றும் அடுத்து அஜித் வைத்து ஒரு படம் எடுக்க வேண்டும் என்பது தனது ஆசை மட்டுமின்றி இலக்கும் என்று கூறினார்.
நடிகர் ரியாஸ் வைத்து முதல் பாடலை இயக்கியுள்ளேன், சிறு வயதில் இதுபோன்ற ஒரு படத்தை இயக்கி பாடலை வெளியிடுவது தனக்கு மற்றற்ற மகிழ்ச்சி. இந்தப் பாடலுக்கு பிறகு இரண்டாவது பாடலுக்கான பணிகளும் நடைபெற்று வருவதாகவும் விரைவில் வெளியாகும் என்றும் தெரிவித்தார்.
பின்னர் பேசிய நடிகர் ரியாஸ் கான், இளம் இயக்குநர் ஆசிக் ஜினு இயக்கத்தில் திருமதி செல்வி படத்தில் நடித்தது நன்றாக இருக்கிறது. ஆசிக் மிகவும் மரியாதையானவர் ஷீட்டிங்கிற்கு முன்பே நாங்கள் பேசி பழகி விட்டோம். பெரிய இயக்குநர், சிறிய இயக்குநர் என்றெல்லாம் ஏதுமில்லை அனைவரும் ஒன்று தான்.
மூத்த நடிகர் என்பதால் டிப்ஸ் கொடுக்க மாட்டேன் ஆனால் இந்த காட்சியை இப்படி நடிக்கலாமா சார் என்று கேட்பேன் அவரும் அதற்கேற்ப எந்த மாதிரியாக காட்சிகள் வேண்டும் எது தேவையோ அதை மட்டும் சொல்லி சிறப்பாக செயல்படுபவார் என்றும் இந்த படத்தின் சோனா சொக்கம்மா முதல் பாடல் இன்று வெளியிடுகிறோம் என்றும் கூறினார்.
சினிமாவில் ஒவ்வொரு நாளும் புது புது நடிகர்கள் இயக்குநர்கள் வந்து கொண்டிருக்கின்றனர். அப்படி இருக்க இவரும் புதிது தான் என்றாலும் நன்றாக படத்தை எடுத்துள்ளதாக கூறினார்.
சமீப காலத்தில் திரைத்துறை உட்பட இந்தி மொழி தொடர்பாக விவாதங்கள் நடந்து வருவது குறித்த கேள்விக்கு,
இந்தி திணிப்பு என்பது கூடாது இந்தி மட்டுமல்லாமல் எந்த மொழி வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம். தனக்கு தமிழ், இந்தி, தெலுங்கு, ஆங்கிலம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகள் தெரியும். பல மொழிகளை கற்றுக் கொள்வதில் தவறில்லை ஆனால் அதை திணிப்பது தான் தவறானது என்று தெரிவித்தார்.
தற்போது சினிமாவில் அரசியல் தலையீடுகள் அதிகரித்து வருவது குறித்த கேள்விக்கு இளையராஜா பாக்யராஜ் போன்றவர்கள் எதன் அடிப்படையில் அவ்வாறு பேசினார்கள், அதற்கான நோக்கத்தை அடைந்தார்களா என அவர்களுக்கு தான் தெரியும். அது மட்டுமின்றி அவர்கள் பிரபலங்கள் என்பதால் பெரிதாக பேசப்படுகிறது.
சாதாரண மக்கள் பேசினால் இவ்வளவு பெரிதாக மாறுமா என்று கேள்வி எழுப்பினர். அதுமட்டுமின்றி அது அவர்களது சொந்த விருப்பம் எனவும்,
நாளுக்கு நாள் வளர்ந்து வரும் சினிமா துறையில் புதிய இயக்குநர் இளம் இயக்குநராக ஆசித் ஜினு கதை கூறும் போதும், நடிக்கும் போதும் அவரை எல்லோரும் இயக்குநராக தான் பார்த்தோமேயன்றி சிறியவராக பார்க்கவில்லை.
திறமைக்கு வயதில்லை என்பது போல அவர் எளிமையாக, மரியாதையுடனும் என்னிடம் வசனங்களை கூறுவார் எனவும், சினிமா எந்த மாதிரியாக சென்றாலும் படத்திற்கு கதை முக்கியம் இந்த படத்திலும் கதை நன்றாக உள்ளது என்று கூறினார்

Insulin Resistance : ஆபத்தான நோய்களை உண்டாக்கும் இன்சுலின் எதிர்ப்பு! அறிகுறிகள் எப்படியிருக்கும்? Manithan

viral video: அச்சுறுத்திய நபரை வெறியோடு கடிக்க பாய்ந்த பாம்பு... பலரும் கண்டிராத பதறவைக்கும் காட்சி! Manithan
