ஓவர் திமிரு தான் அவருக்கு ... அஸ்வினை முறைத்த ராஜஸ்தான் அணி வீரர்... ரசிகர்கள் கோபம்

Ravichandran Ashwin Gujarat Titans Rajasthan Royals IPL 2022
1 மாதம் முன்

ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணியின் இளம் வீரர் ரியான் பராக் தான் செய்த செயல் மூலம் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளாகியுள்ளார். 

கடந்த மார்ச் 26 ஆம் தேதி தொடங்கிய நடப்பு ஐபிஎல் சீசனின் லீக் போட்டிகள் நிறைவடைந்து தற்போது பிளே ஆஃப் ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதில் குஜராத்,லக்னோ, ராஜஸ்தான், பெங்களூரு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய நிலையில் டெல்லி, பஞ்சாப், ஹைதராபாத், கொல்கத்தா, சென்னை, மும்பை அணிகள் தொடரிலிருந்து வெளியேறின.

இதில் நேற்று நடந்த முதல் பிளே ஆஃப் ஆட்டத்தில் ராஜஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் அணி பைனலுக்குள் நுழைந்தது. இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி யில் கடைசி ஓவரின் கடைசி பந்தில் ரவிச்சந்திரன் அஸ்வினும், ரியான் பராக்கும் களத்தில் நின்றனர். ஏற்கனவே தனது  சேட்டைகளால் கடும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ள ரியான் பரான் நேற்றும் சர்ச்சையில் சிக்கினார். 

அதாவது கடைசி பந்து பேட்டில் படால் ஓயிடாக வீசப்பட்டு நேராக விக்கெட் கீப்பரிடம் சென்றது. ஆனால் ரியான் பராக் அஸ்வினை கேட்காமல் , அவருக்கு தெரியப்படுத்தாமல் வேண்டுமேன்றே ரன் ஓடி ஆட்டமிழந்தார். இதில் அஸ்வின் மீது துளியும் தவறு இல்லை என்றாலும்  ரியான் பராக் ஆட்டமிழந்ததும் அஸ்வினை முறைத்து பார்த்து சென்றார் .  இந்த செயல் ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. 

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.