6 பந்துகளில் 6 சிக்ஸ் - ஐபிஎல் வரலாற்றில் முதல் வீரராக ரியான் பராக் படைத்த சாதனை

Kolkata Knight Riders Rajasthan Royals Cricket Record Riyan Parag IPL 2025
By Karthikraja May 04, 2025 02:37 PM GMT
Report

 ஐபிஎல் தொடரின் 53 வது லீக் போட்டி, இன்று, ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கிடையே நடைபெற்றது.

KKR vs RR

இதில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த கொல்கத்தா அணி, 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் குவித்தது. 

rr vs kkr ipl 2025

207 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி, 20 ஓவர் முடிவில், 8 விக்கெட்களை இழந்து 205 ரன்கள் மட்டுமே எடுத்ததால், 1 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது.  

riyan parag 6 six

இந்த போட்டியில், ராஜஸ்தான் அணி கேப்டன் ரியான் பராக், 45 பந்துகளில் 6 பவுண்டரி, 8 சிக்ஸர்கள் உட்பட 65 ரன்கள் எடுத்தார்.

ரியான் பராக் 6 சிக்ஸ்

இதில் 12 வது ஓவரை மொயின் அலி வீச அதை எதிர்கொண்ட ரியான் பராக், 12 வது ஓவரின் கடைசி 5 பந்துகளில் தொடர்ச்சியாக 5 சிக்ஸர்களை விளாசுவார்.

riyan parag 6 six

அடுத்து வருண் சக்கரவர்த்தி வீசிய 13 வது ஓவரில், 13.2 ஓவரில் ரியான் பராக் மற்றொரு சிக்ஸர் அடிப்பார். 

இதன் மூலம், ஐபிஎல் வரலாற்றில் தொடர்ச்சியாக 6 சிக்ஸர் அடித்த ஒரே வீரர் என்ற சாதனையை ரியான் பராக் படைத்துள்ளார்.

ஆனால், தற்போது வரை ஐபிஎல் போட்டிகளில் யாரும் ஒரு ஓவரில் 6 சிக்ஸர்களை அடித்தது இல்லை. கிறிஸ் கெய்ல், ராகுல் தெவதியா, ரிங்கு சிங், ரியான் பராக் ஆகியோர் 5 சிக்ஸ் அடித்துள்ளனர்.