சென்னை புறநகரில் உள்ள சுங்கச்சாவடிகளில் உயரும் சுங்கச் சாவடி கட்டணம் - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் கட்டணம் ஏப்ரல்1ம் தேதி முதல் உயர்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உயரும் சுங்கச் சாவடி கட்டணம்
சென்னை புறநகரில் உள்ள 5 சுங்கச்சாவடிகளின் கட்டணத்தை மார்ச் 31 ஆம் தேதி முதல் உயர்த்துவதாக தேசிய நெடுஞ்சாலைத் துறை தெரிவித்துள்ளது.
இதனால் சென்னையில் இருந்து வெளியில் செல்லும் ஒவ்வொரு காரும் 5 ரூபாயிலிருந்து 15 ரூபாய் வரை கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டி வரும்.
இந்தியாவில் உள்ள 566 சுங்கச் சாவடிகளில் 48 தமிழ்நாட்டில் உள்ளன. இந்நிலையில் 4 சக்கர வாகனங்களுக்கான சுங்க கட்டணத்தை 5 சதவிகிதமும், லாரிகள், டிரக்குகள் சுங்க கட்டணத்தை 10 சதவிகிதம் வரையும் உயர்த்த தேசிய நெடுஞ்சாலைத் துறை பரிந்துரைத்து இருந்தது.
மேலும் தமிழகத்தில் உள்ள 29 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு மற்றி அறிவிப்புகள் வெளியாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.