6000 பேர் சேர்ந்து உருவாக்கிய உதயசூரியன் சின்னம்: உலக சாதனைக்கான விருதை பெற்றார் முக ஸ்டாலின்
திமுகவின் சின்னமான உதய சூரியனை உலக அளவில் கொண்டுசெல்லும் முதல் முயற்சியாக'THE LARGEST HUMAN IMAGE OF A POLITICAL PARTY EMBLEM - 'THE RISING SUN' என்கிற உலக சாதனை படைக்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி சென்னை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் மா.சுப்பிரமணியன் எம்எல்ஏ அவர்கள் பிரம்மாண்ட நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார்.
இன்று காலை 10 மணியளவில் ஒய்எம்சிஏ மைதானத்தில் 6000 பேர் இணைந்து உதயசூரியன் வடிவத்தில் நின்றனர். இதனை பார்வையிட்டு பதிவு செய்ய வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் யூனியன் என்கிற அமைப்பினை சார்ந்த டாக்டர் சுனிதா தோட்டே மற்றும் ஆசிய சாதனைக்குரிய சான்றிதழை வழங்கிட, ஏசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்அமைப்பைச் சார்ந்த திரு விவேக் என்பவரும் வந்திருந்தனர்.
தொடர்ந்து உலக சாதனை மற்றும் ஆசிய சாதனைகளுக்கான சான்றிதழ்களை திமுக தலைவர் முக ஸ்டாலினிடம் வழங்கினர்.