என்னது மறுபடியுமா ? மீண்டும் அதிகரித்த பெட்ரோல்,டீசல் விலை
கடந்த நான்கரை மாதங்களுக்கும் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.101.40-க்கும்,அதைப்போல், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.91.43-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில்,இரண்டாவது நாளாக இன்றும் பெட்ரோல்,டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.அதன்படி,சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 75 காசுகள் அதிகரித்து ரூ.102.91-க்கும்,அதைப்போல், ஒரு லிட்டர் டீசல் விலையும் 76 காசுகள் அதிகரித்து ரூ.92.95-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
உக்ரைன்- ரஷ்யா போரால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ள நிலையில்,கடந்த இரண்டு நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 1 ரூபாய் 51 காசுகளும்,டீசல் விலை லிட்டருக்கு 1 ரூபாய் 52 காசுகள் அதிகரித்துள்ளது.இது வாகன ஓட்டிகளுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.